Saturday, March 27, 2010

தோழி & காதலி

ஒரு
தோழி காதலியாகும்போதும்
காதலி தோழியாகும்போதும்
இதயமும் இடைவெளியும் ..
இணைக்கப்படுகிறது வெகுவாய்!


ஆனால் ஒரு உண்மை
தோழிகளுக்கான இடைவெளியிலிருந்து
காதலிக்கான இடைவெளிகளை
பிரித்தெடுப்பது கடினம்

மீண்டும் நாளைக்கு......


கல்லூரி செல்லும் வேளை..


வேம்படி வீதியில் அன்னநடை

பழகும் என் சைக்கிள்- உன்பொருட்டு..

வருவாயோ வரமாட்டாயோ..?

கூடவே உன் தங்கை வருவாளா?

வயது போன நேரத்தில் கூட

காவல் பார்க்க உங்கப்பர் வருவாரா..?

பத்தாம் கிளாஸ் படிக்கும் போதும்

பத்தி இல்லா கேள்விகள்... பதிலளிக்க

பிரேம்குமார் மிஸ் ஆல் கூட முடியாது..

தலை குனிந்து வரும் என் தேவதை

தனியாய் நடந்து வருவதும் அழகுதான்..

பூவுக்குள் நாகம் போல ஆபத்தனதும்தான்

ஏனெனில் அப்பன் வருவான் பின்னால்

வேம்படிக்கு திரும்புகையில்....

புன்னகையுடன் கூடிய ஓரப்பார்வை

அது ஆயிரம் கதை கூறுமே.......

கல்லூரி முடியுமட்டும் இருப்பு கொள்ளாது

பாடங்களையும் சரிவர கவனிக்காது

மீண்டும் என் தேவதையின்

பின்னால் அன்னநடை

குறித்த வீதி வந்ததும்

மீண்டுமொரு ஓரப்பார்வை

போதும் எனக்கு.. அன்றைய பொழுதுக்கு..

மீண்டும் நாளைக்கு......

என்பயணம் அவள் பின்னால் தொடரும்...

மோசம் செய்ததும் சரிதானா?

வாசம் வீசும் நம் உறவுக்குள்


வேசமின்றி நாசவேலை செய்தது யார்?

பாசம் வைத்து சிலர் பழகி

மோசம் செய்ததும் சரிதானா?

மறைவு எதுவும் எமக்கில்லை என்று

இறுமாந்திருந்த எனக்கு

உன்னால் கிடைத்த பதில் சரிதானா?

வாழ்வில் ஒரு தடவை.

நிகழும் மகிழ்வான நிகழ்வு பற்றி

எனக்கு சொல்ல மறந்ததும் சரிதானா?

உயிர்த்தோழன் என்று உரக்க

நான் கூறியது வலுவிழந்து போனதே....

நம்மை பிரிக்க பலர் நினைத்த போது

பிழறாமல் நின்றவனே- இன்று

தொலைதூரத்தில் நான் இருக்க

மனு ஏதும் கொடுக்காமல்

பிரிவெளுதியது நியாயம் தானா?

கண்களில் கண்ணீர் அருவியென பாய

வெண்ணிலவின் ஒளியும் மங்கி போக

கோபம் தணித்து உனை எதிர்பார்த்து

சோகத்தோடு காத்திருக்கின்றேன்





கஸ்ரோ

என்றும் அழிக்கப்போவதில்லை...............

நீ வர மாட்டாய் என்று தெரிந்தும்,

எனக்கான உன் இதயம்

இடம் மாறிசென்றது தெளிவாக தெரிந்தும்....

இதயத்தில் எழுதிய உன்னை

என்றும் அழிக்கப்போவதில்லை...............

நட்புகள்


ஆண்டுகள் சில சென்றால்

அன்பான முகங்கள் மறக்குமோ....

நாடு விட்டு நாடு சென்றால்

நட்புகள் தான் பிரிவெழுதுமோ....

நம்பிக்கையின் அஸ்திவாரங்கள்-இன்று

ஆட்டம் காணுமோ.......?

நான் செய்த பிழை எதுவோ....

எனக்கெதுவும் புரியலையே...!!!


கஸ்ரோ

உன் மனசில்,,..................

காதல் எனும் வான வெளி

மப்பும் மந்தாரமுமாய் இருந்து

வசந்தம் கொண்டாடிய கணங்களில்

கையில் ஒரு குட்டி பொம்மையுடன்

மனதில் என்னையும் கொண்டு உறங்கினாய்

காதல் எனும் வானவெளி

வரட்சியில் வாடி வதங்கிய போது

அருகில் மூன்று உயிர் பொம்மைகளுடன்

நீ ஆனந்தமாக உறங்குகின்றாய்.....

உன் மனசில்,,..................

நடந்தது நன்றாகவே நடந்தது......


படிப்பதிட்கு அவள் வேம்படி சென்றபோது
இடி இடித்தது என் உச்சந்தலையில்
வெட்டியாய் திரியும் காலிப்பயல்களை நினைத்து.....
வெண்சட்டை உடுத்தி அவள் சென்றபோது
ஆசைபட்டேன் அவள் கழுத்துபட்டியாக.......
தம்பர் மண்டபத்தில் இருந்து எட்டி பார்த்தபோது
தேவதையின் தரிசனம் கிடைக்காததால்
தம்மடிக்க தொடங்கினேன் தனிமையில்..
"பிக் மச்" இட்காவது வந்திருப்பாள் என்று
சற்றே எட்டி பார்த்த போது....
பத்திரிசியார் மைதானத்தில் அவளை...
கண்டதாக சிலர் கூறினார்,,,,,
உனை நினைத்த நேரத்தில்.............
உனக்காக களித்த பொழுதில்...........
எனக்காக எத்தனையோ கருமங்களை
ஆற்றியிருந்தால்...எதாவது நடந்திருக்கும்...
நல்லது........................
நடந்தது நன்றாகவே நடந்தது......

கஸ்ரோ...........

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்

பார்த்தவுடன் முதல் பார்வையிலேயே பிடிக்கணும்
இதுதாண்டா உன் ஜோடின்னு மனசு சொல்லணும்
இதயத்தில் ஏறி உட்கார்ந்து எனை இம்சிக்கணும்
தூக்கம்கெட்டு அவள் நினைவுகள் எனை வறுதெடுக்கணும்
அவள் நினைவோடேயே மனசு அலையணும்
மறுபடி எப்போ பார்ப்பேன்னு எம்மனசு தவிக்கனும்
இந்த சின்ன ஆசைகள் எல்லாம் ஒரு பொழுது
கேள்விகளையும் பதில் அற்றவைகளாகவும் இருந்தன.....

முதற் பார்வையிலேயே பிடித்தது
உன் ஜோடின்னு மனசு சொன்னது
உன் நினைவுகள் எனை இம்சித்தன
அலை பாய்ந்த என் மனசு
உன்னை நினைத்து தினமும் ஏங்கியது
உன்னை பார்த்த பின்பு இவை எல்லாம் நிகழ்ந்தது

இனியவை

ஒரு சந்திப்பு...........

இனியவை, உங்கள் மனதிற்கு இனியவை நினைக்க நினைக்க இக்கணமும் இனிப்பவை, எண்ணும் போதெல்லாம் மனதில் ஒரு மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் உண்டு பண்ணுபவை எவை என்று கேட்டால் ஓராயிரம் காரணங்களை சுட்டிக்காட்டுவீர்கள் முதற் காதல் தொடக்கி முதலிரவு வரைக்கும் அசை போடுவீர்கள்... ஆனால் பிரிந்து சென்ற நண்பர்களின் தொடர்பு, உருவம் மாறுகின்ற வயதில் பிரிக்கப்பட்டு ஆள் அடையாளமே 100 வீதம் மாறி போயிருக்கின்ற ஒரு சூழ்நிலையில் 14 வருடங்கள் கழித்து அந்நிய மண் ஒன்றில் என்னை அடையாளம் கண்டு ஆரத்தழுவிய அந்த கணப்பொழுது என்னை கண்டு கொண்ட போது அவன் அடைந்த ஆனந்தம் என் வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்களை ஒன்றாகி விட்டது... ஆயிரத்து தொள்ளயிரத்து தொண்ணூற்று ஐந்து ஜப்பசி பிரிந்த நாங்கள் 2009 நவம்பர் இல் சந்தித்தோம் ... அந்த நண்பனின் பெயர் கோகிலன் ..........................
பூச்செண்டு கொண்டு வந்தேன்

பூந்தளிரே உனக்காக

பூரிப்புடன் வாங்கி வைத்து

புறமுதுகு காட்டி சென்றாயே...


மாலை கொண்டு வந்தேன்

மாங்கிளியே உனக்காக

மனமகிழ்ந்து சூடினாயே - இன்று

மலர் பாடை கட்டினாயே எனக்கு...


பால் பழமும் கொண்டு வந்தேன்

பசும் மானே உனக்காக

பாங்குடனே அருந்தி விட்டு

பாதை மாறி சென்றாயே.....


இன்னிசை கீதம் இசைத்து வந்தேன்

இசைகுயிலே உனக்காக இசை கேட்டு

இசையோடு வாழ்ந்து

இழவு காத்த கிளியக்கினாயே இன்று...


கஸ்ரோ

என்றார்கள்

கல்லுக்குள்ளே ஈரம் உண்டு என்றார்கள்

அது கசிவதும் கூட உண்டு என்றும் சொன்னார்கள்

கல்லை விட கடினமனத உன் மனசு

அதை எண்ணி கசிகிறதே என் இதய குருதி

காரிருள் கானகத்தில் கூட சிற்சில நேரம்

விட்டில்கள் நொடிப்பொழுது வெளிச்சம் தரும்

காதல் எனும் பறவை இருளுக்குள் போன போது

நம்பிக்கை சுடராய்எதுவுமில்லை எனக்கிங்கு....

கஸ்ரோ

உப்பின் சுவை

உப்பும் முத்தும் ஒரே வகையான ஒலிச்சுவை

கண்ணீர் துளி உப்பின் சுவையுடையதே.........

முத்தை அதன் சுவையை அறியாத நான்....

உப்பின் சுவையை தினமும் உணருகின்றேன்

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்காம்
சொல்கிறார்கள் பலர்.... இல்லையே..............

எனக்கும் உனக்கும் ஒன்றாகத்தானே இருந்தது.....
சின்ன வயசில் காதல் பீலிங்க்ஸ் ..........
சேலத்து மாங்காய் என்றால் பீலிங்க்ஸ்......
இறால் கறி என்றால் இறக்கை கட்டும்........
வெண்டிக்காய் என்றால் தூர ஓடுவோம்
பீலிங்க்ஸ்பள்ளி செல்லும் நேரம் ஒன்று.....
பார்வைகள் பரிமாறும் கணங்கள் ஒன்று.....
காதல் தெரியாத வயசில் காதலித்த
பீலிங்க்ஸ்நம்பவில்லை நானும் அப்போ........
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு பீலிங்க்ஸ்....
என்ற பீலிங்க்ஸ் ஆனா வார்த்தையினை....
கடைசி பையன் பால் குடிக்கவில்லையே....
மூத்தவன் சொல் பேச்சு கேட்கிறான்
இல்லையேஐயோ...அவரை இன்னமும் காணவில்லையே.....
உன் பீலிங்க்ஸ்..தனிமை..தவிப்பு..இயலாமை.. என் பீலிங்க்ஸ்...
தோற்று போனது... என் பீலிங்க்ஸ் பற்றிய பீலிங்க்.......
கஸ்ரோ

காதலிக்காதீர்கள்......

காதலிக்காதீர்கள்......
அது வெற்று தாளில்
நீங்கள் கனவுடன் எழுதும்
உங்கள் கவிதை போல்
அழகாக இருக்காது.....................

கஸ்ரோ
ஏன் தலை குனிந்து நிற்கிறாய்?

என் அன்பே.....? வெட்கமா......?

ஓ.............................................................

என்னை மறந்து விடுங்கள்.....

என்று சொல்லி சென்ற

அந்த கணப்பொழுது அல்லவே இது...

கஸ்ரோ

வேதனை

வாடிப்போன
வேதனை பற்றி

மடிந்து போகும்
பூக்களிடம் கேட்காதீர்கள்...........

என் காதலிடம்
உரத்து கேளுங்கள்
மொட்டு நிலையிலிருந்தே
கூறும் வேதனையின்
சோகம் பற்றி......

கஸ்ரோ.

முதல்பார்வை .

உன் திருமணத்திற்கு பின்னான
உன் வாழ்விற்கும்
தனித்து விடப்பட்டதிட்கு
பின்னான
என் வாழ்விற்கும்
பல நிலைகள் உண்டு இப்போ...
நாம் இருவரும் காதலித்த போதும்
நான் இப்போதும் உன்னை
காதலிக்கின்ற போதும்
பல நிலைகள் உண்டு.....
ஆனாலும்
நிலையான ஒரு நிலை
நிரந்தரமாய் உள்ளது..
அது நிரந்தரமாய்
எப்போதும் இருக்கும்
அது எனை நோக்கிய
உந்தனது
முதல்பார்வை .......

கஸ்ரோ.....

என்னவளே

என்னவளே எனக்காக மணமாலை
வாங்கி வருவாய் என காத்திருந்தேன்
காலங்கள் கழிந்ததே தவிர
கன்னியுன்னை காணவில்லை...
வந்தாய் எனக்காக மாலையுடன்...
அது என் கல்லறைக்கே அர்ப்பனமகியது

கஸ்ரோ

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....

மறக்க முடியுமா...? அந்த நாட்களை....
மத்தியத்து நண்பர்கள்.....
கல்வியினை தவிரஏனைய அனைத்தையும்
கற்க சென்ற நாட்கள்..
மத்திய தாயின் மடியில்
புரண்டு விளையாடிய அந்த நாட்கள்
பள்ளி ஆசிரியர்களிடம் படிக்க மறுத்து
பல பாடம் படித்த நாட்கள்..........
இப்போ நினைத்தால் கவலை வருகின்றது
அறிவற்ற நிலையில் ஆசிரியர்களுடன்
அடிதடிக்கு சென்ற நாட்கள்
இப்போ புரிகின்றது..
ஆசிரியர்கள் அடாவடி செய்தாலும்
அடங்கி போக வேண்டுமென்று
இப்போ நன்றாக புரிகின்றது..
வேம்படி பிள்ளைகளுக்கு பின்னால் சென்றது....
சுண்டிகுளிக்கு பின்னால் சுற்றி திரிந்தது...
நண்பனுக்கு உதவி..நட்பிற்கு உதவி... என்று...
நாய் மாதிரி.. நாலாபக்கமும் நடமாடியது...

மூலையில் இருந்த என்னை
முன்னிலைப் படித்தி விட்ட
பிரேம்குமார் மிஸ்.......
தட்டிகொடுத்து நிமிர வைத்த....
ஓங்கார மூர்த்தி சேர்..........
ஜெயக்குமார் சேர்......
நன்றாக இருப்பாய் என நன் மனதோடு(/??) வாழ்த்தும்
ஜெயசீலன் சேர்......
வம்பு வரதன்...
சகுனி சந்திரகுமார்....
மறக்கமுடியுமா???
மத்தியத்து நினைவுகளை.....

முனியப்பரில் களித்த பொழுதுகள்...
சண்டைகளுடன் கூடியே வாழ்ந்தாலும்
நட்புடன்வாழ்ந்த நிமிடங்கள்
போர்ஸ்டார் இற்காக போராடிய பொழுதுகள்
சாதனை கழகத்தில் இருந்த
சந்தோஷமான காலங்கள்மறக்க முடியுமா?
நண்பர்கள் தம்பிகள் என களித்தகனாக் காலங்கள்....
பிரதாப் கமி கீதா கர்சன் சுகந்தன் சுசந்தன்
மகிந்தன் கிறிஸ்டி கிச்சான் கிரி சிவா
வெடி ஜெயதாஸ் மயூ ரீகன் அரவிந்தன்
அபிசேகன் மற்றும் பலர் மறக்க முடியுமா...?
கஸ்ரோ
வீணையிடம் உறவாட

விரல்களுக்குதனே உரிமை...

விளக்குடன் உறவாட

விட்டில்களுக்கு தானே உரிமை......

உன் விழிகளை காட்டி

எனை விட்டில் ஆக்கியது ஏன்?


கஸ்ரோ

யார் மனசில யாரு?

யார் மனசில யாரு?

என் மனசுல நீ

உன் மனசுல நான்

எம் இருவரின் மனசிலும்

நம் எதிகாலம்--அது அப்போ....

இப்போ உன் மனசில

உன் கணவன்,பிள்ளைகள்.

நீயும் என் காதலும்...

என் மனசில் இப்போதும்.....

நிரந்தரமாய்.........

கஸ்ரோ

மோசமான நிமிடம்..

உலகத்திலேயே மிக மோசமான விடயம்

நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு

பிரிந்து செல்வதுதான்..........

அதிலும் நாம் காதலித்த பெண்

"நீ வேணாம் என்னை மறந்திடு"

என்று சொல்வாங்களே அதுதான்

மிக மிக மோசமான நிமிடம்...

எனக்கொரு கல்லறை வேண்டும்


எனக்கொரு கல்லறை வேண்டும்

யாரவது அமைத்து தாருங்கள்

வேதனைகளை தாங்கிய பொழுதுகள்

சோதனைகளை கொண்ட வாழ்க்கை

தோல்விகள் அனுபவித்த கணங்கள்

ஏமாற்றங்களாய் அமைந்த நிமிடங்கள்

துரோகங்களையே சந்தித்த என் மனது

வந்த வேகத்தில் திரும்பிய உறவுகள்

காற்றாகி போன பாசாங்கு வார்த்தைகள்

வெறுமையாகி போன எனது காதல்

கண்ணீராய் போன எனது கடந்த காலங்கள்

இவைகள் எல்லாம் புதைக்கப்படவேண்டும்

எனவே எனக்கொரு கல்லறை வேண்டும்.....

யாராவது அமைத்து தாருங்கள்.............

கஸ்ரோ

எப்படி இது நியாயம் அன்பே.........?

காதல் எனும் மைதானத்தில்

களிப்புடன் விளையாடவே கனவு கண்டேன்

நானும் நீயுமே வீரர்களாய் இங்கு

நடுவர் ஏதும் நமக்கில்லை எங்கும்

தவறாய் ஆட்டத்தை ஆடியதும் நீதான்...

தடுத்து நிறுத்தி போதும் என்ற என்னை

உதைத்து வீழ்த்தியதும் நீதான்...

அன்பே..................

சிவப்பு அட்டை காட்டியதும் நீதான்

எப்படி இது நியாயம் .................??

மேன்முறையீட்டு மனுவும் செய்தேன்

நீதியின்றி உன்னால் நிராகரிக்கவும் பட்டேன்

நடுவர் பார்வையாளர் அற்ற மைதானத்தில்

மூன்றாம் நடுவரையும் நீதான்...

எப்படி இது நியாயம் அன்பே.........?

கஸ்ரோ

நலமாக இருக்கின்றாயா...

நலமாக இருக்கின்றாயா...
இருப்பாய் என்றே நினைக்கின்றேன்
நலமாக நீ வாழ்வதற்கு
எந்தன் வாழ்த்தும் உனை சேரட்டும்
மனை மாறி சென்ற உனை
மனதால் நினைப்பதும் கூட
தவறு என்று தெரிந்த போதும்
என் மனதை கட்டுப்படுத்த
என்னால் முடியவில்லையே ...
கடந்து செல்லும் ஒவ்வோர் கணமும்
உன் நினைவுகளை
சுமந்தே செல்கின்றன
சுமையாக அல்ல சுகமாக.......

CASTRO

வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது

CASTRO