Monday, July 19, 2010

ஞாபகம் வருகுதா..?

மல்லிகை பூவைக் கண்டால்....
முகர்ந்து பார்க்க ஆசைபடுவாய் .
கோயில் எதனையும் வழியில் கண்டால்
இறைவனுக்கென்று அர்ப்பணிப்பாய்
அருகில் நிற்கும் என்னை
அம்போ என்று அலைய விடுவாய்
ஞாபகம் வருகுதா..?


கல்லூரி செல்லும் வேலை ....
உனக்கும் எனக்கும் பாதைகளோ வேறு வேறு
என்தரிசனம் தேடி நீயும்
உன் தரிசனம் நாடி நானும்
காவல் இருந்து கண்களால்
கதை பல பேசி களைந்து செல்வோம்
ஞாபகம் வருகுதா..?


பருவம் அடைந்த அன்று தொடக்கம் ....
படலை தாண்டி உன்னை காணவில்லை,
பாவி நான் காரணம் புரியாமல்
உன் வீட்டு படலையடியால்
பல்லாயிரம் தரம் நடந்தேன்
ஞாபகம் வருகுதா..?


கண் கொண்டு எனை பார்க்க மறுத்தாய்.
அன்புதனை உள்ளடக்கி
வேசம் போட்டுத் திரிந்தாய்
நீ என்னை கண்டு நாணம் கொண்டாயோ
எனக்கு தெரியாது
உன்னை கண்டு வெட்கம் நான் அடைந்தேன்
ஞாபகம் வருகுதா..?


இதய காதலை கவிதையாய் எழுதி...
உன் கையில் தந்தேன்
வெட்க சிரிப்பு ஒன்றை மட்டுமே
பதிலாய் தந்து இறுதிவரை
என்னோடு கூட வருவாயா
என்று கேட்டாயே
ஞாபகம் வருகுதா..?


காலம் செய்த கோலம்
வேம்படி விட்டு நீ விலகி செல்ல
வேம்படி மகளிர் கூட
கடைசி வரை என் மனதில்
பதியவில்லையே நீ அறிவாயா....?


எதை நீ இன்று அறிவாய் ?
எதை நீ நினைவில் வைத்து இருப்பாய் ?
எவருக்கு தெரியும்......

என் வேதனை......
என் வேதனை......
என் வேதனை......


அன்புடன்
கஸ்ரோ

லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

நான் முந்தி வேம்படி பிள்ளை love ஒன்றை பண்ணினானாம்
அந்த காதல் தோல்வியில முடிஞ்சு போச்சாம்
அதனால் தான் என் கவிதைகள்(????) எல்லாம்
காதல் சோக கவிதைகளாக இருக்காம்.....
எல்லா கவிதையும் அந்த பிள்ளைய
பற்றிய எண்ணங்களாகவே இருக்காம்
என் எண்ணம் எல்லாம் பியூச்சர் மேல இல்லையாம்
பிரிந்து போன அந்த பிள்ளை மேலேயே இருக்காம்,
என்று இந்த ஊர் சொல்லுது.....
காதலில் தோற்றவன் தான்
காதல் சோக கவிதை எழுதணும்
என்று இருக்கா?
மற்றவங்க எழுதின தப்பு என்று
பெரியவங்க யாரும் சொன்னாங்களா....
அப்படித்தானே என்று
சும்மா comment பண்ணினா
கூட நம்பி விடுறாங்கப்பா.....
எத்தனை mail ,,
எத்தனை comments ....
எத்தனை லொள்ளு ........ லொள்ளு....
ரொம்பதான் லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....

castro

வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்

மலர்ந்த காதல் மரணம் அடையுமா.?
இருவர் பிரிவு என்பது காதலுக்கு கல்லறை அமைக்குமா....?
காதலர்களுக்கு மரணம் சகஜமே...
காதலுக்கு மரணம் சாத்தியமாகுமா..??



காதல் இனிமையானது காதல் தேவதையே
இனிமையாக தானே இருந்தாய் நேற்று வரை...
வரமாக இருந்தது உன் நினைவு....-இன்று
துயரமாகி பாரமாய் என்னுள் உன் நினைவு.....


தனிமையாகி போன காதலால்
என் கவிதையும் தனிமையாகி போனதே....
அன்பே உன்னால் முடமாக்கபட்டு...
நொந்து போன என் காதலும்....
சந்தோசம் பாடையேறி போனது போன்ற
என் பேனாவின் வார்த்தைகளும்
என் மரண படுக்கையில் மகிழ்ச்சியுடன்...
நிறைவேறுமா......?


வாழ்க்கை முழுவதும் தனியாக
வாழ்ந்திட முடிவதும் இல்லை.....
உன் முதற்காதல் நினைவுகள் இன்றி
நான் வாழ போவதுமில்லை....
மல்லிகை செடியொன்று
என் நந்தவனம் வந்தாலும்...
மலர் பல தந்து மணம் வீசி நின்றாலும்....
தனிமை என்கின்ற என் தனி பொழுதுகளில்
நெருடுகின்ற முள்ளாய் நீயிருப்பாய்
என்பது நிட்சயமே.....


வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
இவன் கஸ்ரோ