Monday, July 19, 2010

ஞாபகம் வருகுதா..?

மல்லிகை பூவைக் கண்டால்....
முகர்ந்து பார்க்க ஆசைபடுவாய் .
கோயில் எதனையும் வழியில் கண்டால்
இறைவனுக்கென்று அர்ப்பணிப்பாய்
அருகில் நிற்கும் என்னை
அம்போ என்று அலைய விடுவாய்
ஞாபகம் வருகுதா..?


கல்லூரி செல்லும் வேலை ....
உனக்கும் எனக்கும் பாதைகளோ வேறு வேறு
என்தரிசனம் தேடி நீயும்
உன் தரிசனம் நாடி நானும்
காவல் இருந்து கண்களால்
கதை பல பேசி களைந்து செல்வோம்
ஞாபகம் வருகுதா..?


பருவம் அடைந்த அன்று தொடக்கம் ....
படலை தாண்டி உன்னை காணவில்லை,
பாவி நான் காரணம் புரியாமல்
உன் வீட்டு படலையடியால்
பல்லாயிரம் தரம் நடந்தேன்
ஞாபகம் வருகுதா..?


கண் கொண்டு எனை பார்க்க மறுத்தாய்.
அன்புதனை உள்ளடக்கி
வேசம் போட்டுத் திரிந்தாய்
நீ என்னை கண்டு நாணம் கொண்டாயோ
எனக்கு தெரியாது
உன்னை கண்டு வெட்கம் நான் அடைந்தேன்
ஞாபகம் வருகுதா..?


இதய காதலை கவிதையாய் எழுதி...
உன் கையில் தந்தேன்
வெட்க சிரிப்பு ஒன்றை மட்டுமே
பதிலாய் தந்து இறுதிவரை
என்னோடு கூட வருவாயா
என்று கேட்டாயே
ஞாபகம் வருகுதா..?


காலம் செய்த கோலம்
வேம்படி விட்டு நீ விலகி செல்ல
வேம்படி மகளிர் கூட
கடைசி வரை என் மனதில்
பதியவில்லையே நீ அறிவாயா....?


எதை நீ இன்று அறிவாய் ?
எதை நீ நினைவில் வைத்து இருப்பாய் ?
எவருக்கு தெரியும்......

என் வேதனை......
என் வேதனை......
என் வேதனை......


அன்புடன்
கஸ்ரோ

No comments:

Post a Comment