Wednesday, June 30, 2010

ஏனெனில் நான் இன்னமும் உன்னை நேசிக்கறேன்

விதி செய்த விளையாட்டே
நீ எனக்கு கிடைக்கவில்லை -என்று
நினைத்து அமைதியானேன் அன்று....

இது விதியின் விளையாட்டு அல்ல
எனக்கு நீ அளித்த பரிசு -என்று
தெரிந்து கொண்ட போது
அமைதியாய் உன்னை நினைத்து
உறங்கி கொண்டிருந்த என் இதயம்
சுக்கு நூறாகி போனது.....

காதலில் தோற்று விட்டேன்
என்ற கவலையை விட
தோற்கடிக்கபட்டேன் என்பதுதான்
இன்னமும் வலிக்கிறது

ஏமாற்றி விட்டாய் நீ என்று
இது வரை கவலை கொண்டதில்லை
ஏமாந்து போனேனோ என்று
இன்று சிந்திக்க வைத்து விட்டாய்

பிரச்சினை என்று சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்றும்
தொலைபேசியில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
உன் நலமே என்றும் நான்
நாடி வந்த படியால்
நகர்ந்து சென்றேன் உன் தடம் மாறி....

உன் புலம்பெயர்
சந்தோஷ வாழ்விற்கு
பிரச்சினை நானேதான் என்று
இன்றுதானே புரிந்து கொண்டேன்..என் அன்பே....

கோபம் வரவில்லை கண்ணே,
கோலம் ஏன் போட்டாய் நீயும்??
விளக்கி சொன்னால் விலத்தி விடுவேன் தானே
ஒன்பது வருட காதலில்
என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா??


அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய்
உன் கணவனிடமும்
பிள்ளைகளிடமும்.....

ஏனெனில்
உன்னை எவரும் தப்பாக
பேசிவிடக்கூடாது

ஏனெனில் நான் இன்னமும்
உன்னை நேசிக்கறேன்

மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் உள்ளாய்
என்ற போதும் உன்னை மறக்க
ஏன் மனம் தயாராக இல்லையே.....


கஸ்ரோ

Monday, June 28, 2010

உனக்கு சொல்வேன் நன்றி பல....

கல்லூரி நேரங்களில் கூட
கற்பதை பற்றி கண நேரம் கூட
கவலை கொண்டதில்லை
ஏனெனில் என் மனதில்
அப்போதும் உன் நினைவுகளே
நிரம்பி இருந்தன.....

ஆனால்
பாடசாலை பொழுதுகள்
தோல்விகளுடன் கடந்து செல்ல
வாழ்க்கை பயம் வந்தது....


வேலை தேடும் வேலையை விடுத்து...
காதல் செய்யும் நேரங்களே அதிகமாக
வெட்டியாய் கடந்தது சில பொழுதுகள்


இதயத்தில் வாழும்
உன்னையே நினைத்து
பொழுதுகளை நகர்த்தியதால்
உயரங்கள் என்பன
உயர்ந்து போயின.....

ஆனால்,
பணத்தால் உயர்ந்து
பாஸ் போர்ட்டிலும் மாறுபட்டு
கனவானொருவனை கைபிடிக்கும்
எண்ணத்துடன் அழைத்த போதுதான்
காலமெல்லாம் உன்னோடு
வாழும் கனவுகள் கலங்கிய நிலையில்
கண் விழித்து பார்க்கையில்....

காலம் என்னை
கைகழுவி
கடந்து சென்றிருந்தது.

ஆயினும்
பயனின்றி கடந்து சென்ற
காலத்தை கைப்பற்ற
நண்பனின் ஆசியுடனும்
என்னில் உள்ள நம்பிக்கையுடனும்
உறுதியாக ஊர் நாடி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்...

என்ன்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போம் - அப்போது
உனக்கு சொல்வேன் நன்றி பல....
என் பலத்தை
என் மனவுறுதியை
எனக்கு நீ
புரிய வைத்தமைக்காக......


அன்புடன்
கஸ்ரோ

Thursday, June 24, 2010

தோற்றேன்.. தோற்றேன்.. தோற்றேன்.....

கல்லூரியில்
பாட கணக்கை
தவறாக போட்டு
கல்வியிடம்
தோற்றேன்

நிதி கணக்கை
தவறாக போட்டு
பணக்கணக்கில்
தோற்றேன்.

அன்பு கணக்கினை
தவறாக போட்டு
உறவுகளிடம்
அவமானத்துடன்
தோற்றேன்

நட்பு கணக்கினை
தவறாக போட்டு
சில நட்புகளிடம்
தோற்றேன்.

காதலிலும்

தவறாக
கணக்கினை போட்டு
இனிய வாழ்க்கையிடமும்
தோற்றேன்.. தோற்றேன்..
தோற்றேன்.....

கஸ்ரோ
தினம் தினம்
பல பேருடன்
பல விடயங்களை பற்றி
கதைக்கிறேன்
உன் வார்த்தைகளுக்கு
மட்டும்
அர்த்தம் தேடுவது
ஏன்???



விரும்புகிறேன் என்றவளின்
காதலை ஏற்கத் மறுத்த
இதயம்
காதலை சொல்லத் தயங்கிய
உனை நினைந்து
உருகியது எதற்காக??

காதலித்த பொழுதுகளை
உன் பேச்சுகளை மட்டுமே
செவிமடுத்து
மௌனமாக இருந்த
என் உதடுகள்
உன் பிரிவில்
கதறியழ துடிக்குதே
ஏன்???

பிரிவென்ற சொல்லுக்கு
பன்முறை செவிசாய்த்தருந்தும்
உன் பிரிவில் மட்டும்
விழிகளுக்குள் வியர்வை
ஏன்???

கஸ்ரோ

Thursday, June 17, 2010

பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

மலரை நேசிக்கும் நட்பே - அது
உதிர்ந்து போனதிற்காக வருந்தாதே,
மீண்டும் ஒரு மலர் பூக்கும்........

நிலவை நேசிக்கும் நட்பே - அது
மறைந்து போனதிற்காக வருந்தாதே
வளர்பிறை உண்டு என்பதை
உணர்ந்து கொள்............

உறவினை நேசிக்கும் நட்பே - அது
பிரிந்தால் வலி என்பதால்
பிரியாத உறவுகளில் பிரியம் வை.......

கஸ்ரோ