Monday, May 31, 2010

சந்தர்ப்பம் ஏதும் வருமா....? காத்திருக்கிறேன் நண்பர்களே.....?

பசுமரத்தாணி போல மத்திய தாயின் நினைவுகள். –
எவராலும் மறக்க முடியாத அந்த கடந்து போன நிஜங்கள் .
ஆளுக்கொரு பெயர் புதிதாக சூட்டி ஆடிப்பாடிய சுகங்கள் .
கல்லூரியில் எமை ஆட்டி வைக்கும் ஆசிரியர்களையும்
ஆட்டி வைப்போம் என்று ஆரவாரித்து கிளம்பிய
சின்னபிள்ளை விளையாட்டுகள்...

ஜெயசீலன், ஜெயக்குமார் ஆசிரியர்களை கலாய்த்த பொழுதுகள்.
கவிதை கட்டுரை போட்டிகள் வந்தால் பிரேம்குமார் மிஸ் இற்கு
பயந்து ஓடி ஒலித்த நாட்கள். .
ஏர்போர்ட் வழியாக (பாத்ரூம் பக்கம் ) களவாக வீடுசென்ற நாட்கள்,
ரிப்போட்டில் போட்ட நண்பனின் கள்ள கையெழுத்து,
மேசையில் எவருக்கும் தெரியாமல் நண்பியின் பெயரை எழுதி ரசித்த நிமிடங்கள்........
அதற்காய் நண்பர்களிடம் பட்ட நக்கல்கள் .
அத்தனையும் சித்தப்பிரமையாய் தித்தித்ததெப்படி?...
விடைகான முடியாத கல்லுரி நாட்கள் அது.
வருசத்தில் வரும் பிக் மேட்ச்...
ஸ்கௌட், அந்த சைக்கிள் பாக், தம்பர் மண்டபம் ,
மதில் மேலிருந்து பார்க்கும் கிரிக்கட் மெச்,
வேம்படியினை எட்டி பார்க்க உதவி பண்ணும் லோ ஸ்கூல்,
பாதி மீதியாய்ப் பகிர்ந்துண்ணும்
மணி அன்னையின் உப்புத்தூள் மாங்காய்
கற்பனைக்குள் அடங்காத அத்தனை சொர்க்கம்.
பரீட்சைக்காலத்தில் மட்டும் நன்றாக நித்திரை வரும் இரவுகள்,
அந்த சின்ன வயதில் வந்த காதல்,
அதற்காக வேம்படி வீதியில் நூறு முறை சைக்கிள் ஓடிய காலைபொளுதுகள்,,
ஒரு ரூபாய் இற்கு கூட கணக்குப் பார்த்த காலங்கள்.
அத்தனை கெட்டிக்காரர்களும் வித்தியாசமாய் நானும்
ஒன்றாய் இருந்த வகுப்பறைகள்.
எல்லாவற்றையும் மாற்றி அமைத்த
மாணவர் தலைவர் என்கின்ற பதவி,,,

- இப்போ..... திக்கொன்று திசையொன்றாய் எட்டமுடியா தூரங்களில் சந்திக்க நினைத்தாலும் முடியாத தொலைவில் நானும் நீங்களும்,, எப்போ....
எங்கே....
சந்தர்ப்பம் ஏதும் வருமா....?
காத்திருக்கிறேன் நண்பர்களே.....?

castro

No comments:

Post a Comment