வேதனைகளும் வலிகளும் வாழ்க்கையில் இருக்க வேண்டுமே தவிர அவைகளே வாழ்க்கையாக அமைய கூடாது
Monday, April 9, 2012
Thursday, March 24, 2011
சாட்சி
அதனை குப்பை தொட்டியில்
போடவும் மனமில்லை
ஏனெனில் அது செல்லாத ஒரு காதலின்
செத்துவிட்ட சாட்சியாக இருக்கிறது என்பதால்...
castro
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
நட்புகளும் உறவுகளும்
ஏமாற்றமாய்
நகர்ந்தபோதெல்லாம்
வேதனை
வேலாய் பாய்ந்தது......
...
ஏறுகின்ற போதெல்லாம்
மீண்டும் மீண்டும்
சறுக்கி விழுந்த போதெல்லாம்
கைதூக்கி விட யாரும் வரவேண்டாம்
கனிவாய் சில வார்த்தை
நம்பிக்கையாய் சில பார்வை
எதுவும் இல்லையாகி போனதுவே....
மனது நிறைய
மாறாத வடுவோடு
மாற்றங்களை நோக்கி
தன்னம்தனியே...
தூரத்தில் தெரியாத அந்த
ஒளிப்பொட்டினை தேடி ..
நடக்கின்றேன்....
Monday, March 14, 2011
Saturday, February 12, 2011
படித்ததி பிடித்தது.........
வானம் அழுகின்றது உன் பார்வையின்றி
நான் நினைக்காத போது
என் கண்கள் உன்னைப்பார்த்தது
காதலை பிரிக்க ஆயிரம் துரோகிகள்...
என் காதலுக்கு நீயே துரோகி!
அதே காதலுடன் என்னிதயம் மரணம்!
அன்பால் பிறந்த நம் காதல் வாழ
உன் கண்கள் இரண்டும் போதும்
நான் காதல் கொண்ட விழிகள்
அடி நீரில் மறைந்திருந்து
யோலிக்கும் வைரம் போல்
மலர்ந்து மணம் வீசும் றோஜா போல்
உன் இதழ் பிறந்த கதை
அந்த இதழ் மட்டும் என் வாழ்வின் வலி
சிக்கிப்போன உன் பார்வையில்
கம்பியால் பின்னப்பட்டிருக்கும் உன் மௌனம்
வலி கொண்ட இதயம் தேடுதே தன் விழியை!!!
நண்பர்களுக்கு
என் இனிய நண்பர்களுக்கு நம் சந்திப்பும் எப்போதாவது
நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை
நிகழும்
என வேண்டிக் கொள்ளுங்கள்
நம்பிக்கையோடு நாட்களை
நகர்த்துங்கள்
காற்றாவது சுமந்து
வரும் என் முகவரியை
எவருக்கு புரியும்....
இடையினில் விழுந்த விரிசல்
கடலினால் அதிகமாக.....
வேதனையில் துடித்த மனம்
தனிமையில் தவிக்க..
கூடி வாழ்ந்த நெஞ்சங்கள்
தொலை தூரத்தில் இருக்க
இருந்து இல்லாமலாய்
இதயத்தின் வேதனை
எவருக்கு புரியும்....
துடித்த இதயம்
நிசப்தங்கள் துயின்றிட
நெடிய இரவு
நீண்டே போகின்றது....
கஸ்ரோ
கடலினால் அதிகமாக.....
வேதனையில் துடித்த மனம்
தனிமையில் தவிக்க..
கூடி வாழ்ந்த நெஞ்சங்கள்
தொலை தூரத்தில் இருக்க
இருந்து இல்லாமலாய்
இதயத்தின் வேதனை
எவருக்கு புரியும்....
துடித்த இதயம்
நிசப்தங்கள் துயின்றிட
நெடிய இரவு
நீண்டே போகின்றது....
கஸ்ரோ
Wednesday, January 5, 2011

கனவுகள் என்பது கடைசி
வரைக்கும் இருக்கும்,
அதில் பெரும்பாலானவை
கனவாகவே முடிவடைந்து
போவதும் உண்மை......
கற்பனைகளும்
வாழ்வின் கடைசி வரை நீடிக்கும்
அவைகளில் பெரும்பாலானவை
கற்பனையாகவே முடிவடைவதும் உண்மை......
நானும் கனவு காண்கிறேன்,.......
எனக்கும் கற்பனைகள் உண்டு.........
ஆனால்
என் கனவுகளையும்,
கற்பனைகளையும்,
கனவுகளாகவோ.....
கற்பனையுடன்......
மாத்திரம் என் வாழ்வினை
முடிக்கும் எண்ணம் எனக்கில்லை.......
castro.P
Friday, October 15, 2010
நினைவுகள்
கலைந்து போன நட்பினை
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
பழகிய பசுமையான நினைவுகள்
கண்ணீருடன் சிரிக்கும்..
உயிரான காதல்
உறவறுந்து போனதை
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
நினைவுகள் இரத்தமாய் ஞாபகம் வரும்...
castro...
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
பழகிய பசுமையான நினைவுகள்
கண்ணீருடன் சிரிக்கும்..
உயிரான காதல்
உறவறுந்து போனதை
மீண்டும் நினைத்து பார்க்கும் போது
நினைவுகள் இரத்தமாய் ஞாபகம் வரும்...
castro...
Sunday, October 3, 2010
இருக்கணும்
பார்ப்பது எல்லாம் அழகாக இருப்பது போல் தோன்றினால்,
மனதுக்குள்........
ஒன்று கவிதை இருக்கணும்,
இல்லாவிட்டால் காதல் இருக்கணும்
கஸ்ரோ
மனதுக்குள்........
ஒன்று கவிதை இருக்கணும்,
இல்லாவிட்டால் காதல் இருக்கணும்
கஸ்ரோ
Monday, July 19, 2010
ஞாபகம் வருகுதா..?
மல்லிகை பூவைக் கண்டால்....முகர்ந்து பார்க்க ஆசைபடுவாய் .
கோயில் எதனையும் வழியில் கண்டால்
இறைவனுக்கென்று அர்ப்பணிப்பாய்
அருகில் நிற்கும் என்னை
அம்போ என்று அலைய விடுவாய்
ஞாபகம் வருகுதா..?
கல்லூரி செல்லும் வேலை ....
உனக்கும் எனக்கும் பாதைகளோ வேறு வேறு
என்தரிசனம் தேடி நீயும்
உன் தரிசனம் நாடி நானும்
காவல் இருந்து கண்களால்
கதை பல பேசி களைந்து செல்வோம்
ஞாபகம் வருகுதா..?
பருவம் அடைந்த அன்று தொடக்கம் ....
படலை தாண்டி உன்னை காணவில்லை,
பாவி நான் காரணம் புரியாமல்
உன் வீட்டு படலையடியால்
பல்லாயிரம் தரம் நடந்தேன்
ஞாபகம் வருகுதா..?
கண் கொண்டு எனை பார்க்க மறுத்தாய்.
அன்புதனை உள்ளடக்கி
வேசம் போட்டுத் திரிந்தாய்
நீ என்னை கண்டு நாணம் கொண்டாயோ
எனக்கு தெரியாது
உன்னை கண்டு வெட்கம் நான் அடைந்தேன்
ஞாபகம் வருகுதா..?
இதய காதலை கவிதையாய் எழுதி...
உன் கையில் தந்தேன்
வெட்க சிரிப்பு ஒன்றை மட்டுமே
பதிலாய் தந்து இறுதிவரை
என்னோடு கூட வருவாயா
என்று கேட்டாயே
ஞாபகம் வருகுதா..?
காலம் செய்த கோலம்
வேம்படி விட்டு நீ விலகி செல்ல
வேம்படி மகளிர் கூட
கடைசி வரை என் மனதில்
பதியவில்லையே நீ அறிவாயா....?
எதை நீ இன்று அறிவாய் ?
எதை நீ நினைவில் வைத்து இருப்பாய் ?
எவருக்கு தெரியும்......
என் வேதனை......
என் வேதனை......
என் வேதனை......
அன்புடன்
கஸ்ரோ
லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....
நான் முந்தி வேம்படி பிள்ளை love ஒன்றை பண்ணினானாம்
அந்த காதல் தோல்வியில முடிஞ்சு போச்சாம்
அதனால் தான் என் கவிதைகள்(????) எல்லாம்
காதல் சோக கவிதைகளாக இருக்காம்.....
எல்லா கவிதையும் அந்த பிள்ளைய
பற்றிய எண்ணங்களாகவே இருக்காம்
என் எண்ணம் எல்லாம் பியூச்சர் மேல இல்லையாம்
பிரிந்து போன அந்த பிள்ளை மேலேயே இருக்காம்,
என்று இந்த ஊர் சொல்லுது.....
காதலில் தோற்றவன் தான்
காதல் சோக கவிதை எழுதணும்
என்று இருக்கா?
மற்றவங்க எழுதின தப்பு என்று
பெரியவங்க யாரும் சொன்னாங்களா....
அப்படித்தானே என்று
சும்மா comment பண்ணினா
கூட நம்பி விடுறாங்கப்பா.....
எத்தனை mail ,,
எத்தனை comments ....
எத்தனை லொள்ளு ........ லொள்ளு....
ரொம்பதான் லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....
castro
அந்த காதல் தோல்வியில முடிஞ்சு போச்சாம்
அதனால் தான் என் கவிதைகள்(????) எல்லாம்
காதல் சோக கவிதைகளாக இருக்காம்.....
எல்லா கவிதையும் அந்த பிள்ளைய
பற்றிய எண்ணங்களாகவே இருக்காம்
என் எண்ணம் எல்லாம் பியூச்சர் மேல இல்லையாம்
பிரிந்து போன அந்த பிள்ளை மேலேயே இருக்காம்,
என்று இந்த ஊர் சொல்லுது.....
காதலில் தோற்றவன் தான்
காதல் சோக கவிதை எழுதணும்
என்று இருக்கா?
மற்றவங்க எழுதின தப்பு என்று
பெரியவங்க யாரும் சொன்னாங்களா....
அப்படித்தானே என்று
சும்மா comment பண்ணினா
கூட நம்பி விடுறாங்கப்பா.....
எத்தனை mail ,,
எத்தனை comments ....
எத்தனை லொள்ளு ........ லொள்ளு....
ரொம்பதான் லொள்ளு பண்றாங்கப்பா.......... லொள்ளு....
castro
வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
மலர்ந்த காதல் மரணம் அடையுமா.?
இருவர் பிரிவு என்பது காதலுக்கு கல்லறை அமைக்குமா....?
காதலர்களுக்கு மரணம் சகஜமே...
காதலுக்கு மரணம் சாத்தியமாகுமா..??
காதல் இனிமையானது காதல் தேவதையே
இனிமையாக தானே இருந்தாய் நேற்று வரை...
வரமாக இருந்தது உன் நினைவு....-இன்று
துயரமாகி பாரமாய் என்னுள் உன் நினைவு.....
தனிமையாகி போன காதலால்
என் கவிதையும் தனிமையாகி போனதே....
அன்பே உன்னால் முடமாக்கபட்டு...
நொந்து போன என் காதலும்....
சந்தோசம் பாடையேறி போனது போன்ற
என் பேனாவின் வார்த்தைகளும்
என் மரண படுக்கையில் மகிழ்ச்சியுடன்...
நிறைவேறுமா......?
வாழ்க்கை முழுவதும் தனியாக
வாழ்ந்திட முடிவதும் இல்லை.....
உன் முதற்காதல் நினைவுகள் இன்றி
நான் வாழ போவதுமில்லை....
மல்லிகை செடியொன்று
என் நந்தவனம் வந்தாலும்...
மலர் பல தந்து மணம் வீசி நின்றாலும்....
தனிமை என்கின்ற என் தனி பொழுதுகளில்
நெருடுகின்ற முள்ளாய் நீயிருப்பாய்
என்பது நிட்சயமே.....
வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
இவன் கஸ்ரோ
இருவர் பிரிவு என்பது காதலுக்கு கல்லறை அமைக்குமா....?
காதலர்களுக்கு மரணம் சகஜமே...
காதலுக்கு மரணம் சாத்தியமாகுமா..??
காதல் இனிமையானது காதல் தேவதையே
இனிமையாக தானே இருந்தாய் நேற்று வரை...
வரமாக இருந்தது உன் நினைவு....-இன்று
துயரமாகி பாரமாய் என்னுள் உன் நினைவு.....
தனிமையாகி போன காதலால்
என் கவிதையும் தனிமையாகி போனதே....
அன்பே உன்னால் முடமாக்கபட்டு...
நொந்து போன என் காதலும்....
சந்தோசம் பாடையேறி போனது போன்ற
என் பேனாவின் வார்த்தைகளும்
என் மரண படுக்கையில் மகிழ்ச்சியுடன்...
நிறைவேறுமா......?
வாழ்க்கை முழுவதும் தனியாக
வாழ்ந்திட முடிவதும் இல்லை.....
உன் முதற்காதல் நினைவுகள் இன்றி
நான் வாழ போவதுமில்லை....
மல்லிகை செடியொன்று
என் நந்தவனம் வந்தாலும்...
மலர் பல தந்து மணம் வீசி நின்றாலும்....
தனிமை என்கின்ற என் தனி பொழுதுகளில்
நெருடுகின்ற முள்ளாய் நீயிருப்பாய்
என்பது நிட்சயமே.....
வலிக்காத நெஞ்சமதில் உன்னை மறக்காத நினைவுகளுடன்
இவன் கஸ்ரோ
Wednesday, June 30, 2010
ஏனெனில் நான் இன்னமும் உன்னை நேசிக்கறேன்
விதி செய்த விளையாட்டே
நீ எனக்கு கிடைக்கவில்லை -என்று
நினைத்து அமைதியானேன் அன்று....
இது விதியின் விளையாட்டு அல்ல
எனக்கு நீ அளித்த பரிசு -என்று
தெரிந்து கொண்ட போது
அமைதியாய் உன்னை நினைத்து
உறங்கி கொண்டிருந்த என் இதயம்
சுக்கு நூறாகி போனது.....
காதலில் தோற்று விட்டேன்
என்ற கவலையை விட
தோற்கடிக்கபட்டேன் என்பதுதான்
இன்னமும் வலிக்கிறது
ஏமாற்றி விட்டாய் நீ என்று
இது வரை கவலை கொண்டதில்லை
ஏமாந்து போனேனோ என்று
இன்று சிந்திக்க வைத்து விட்டாய்
பிரச்சினை என்று சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்றும்
தொலைபேசியில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
உன் நலமே என்றும் நான்
நாடி வந்த படியால்
நகர்ந்து சென்றேன் உன் தடம் மாறி....
உன் புலம்பெயர்
சந்தோஷ வாழ்விற்கு
பிரச்சினை நானேதான் என்று
இன்றுதானே புரிந்து கொண்டேன்..என் அன்பே....
கோபம் வரவில்லை கண்ணே,
கோலம் ஏன் போட்டாய் நீயும்??
விளக்கி சொன்னால் விலத்தி விடுவேன் தானே
ஒன்பது வருட காதலில்
என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா??
அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய்
உன் கணவனிடமும்
பிள்ளைகளிடமும்.....
ஏனெனில்
உன்னை எவரும் தப்பாக
பேசிவிடக்கூடாது
ஏனெனில் நான் இன்னமும்
உன்னை நேசிக்கறேன்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் உள்ளாய்
என்ற போதும் உன்னை மறக்க
ஏன் மனம் தயாராக இல்லையே.....
கஸ்ரோ
நீ எனக்கு கிடைக்கவில்லை -என்று
நினைத்து அமைதியானேன் அன்று....
இது விதியின் விளையாட்டு அல்ல
எனக்கு நீ அளித்த பரிசு -என்று
தெரிந்து கொண்ட போது
அமைதியாய் உன்னை நினைத்து
உறங்கி கொண்டிருந்த என் இதயம்
சுக்கு நூறாகி போனது.....
காதலில் தோற்று விட்டேன்
என்ற கவலையை விட
தோற்கடிக்கபட்டேன் என்பதுதான்
இன்னமும் வலிக்கிறது
ஏமாற்றி விட்டாய் நீ என்று
இது வரை கவலை கொண்டதில்லை
ஏமாந்து போனேனோ என்று
இன்று சிந்திக்க வைத்து விட்டாய்
பிரச்சினை என்று சொன்னாய்
பிரிந்து விடுவோம் என்றும்
தொலைபேசியில் அழைத்து
அன்புடன் சொன்னாய்
உன் நலமே என்றும் நான்
நாடி வந்த படியால்
நகர்ந்து சென்றேன் உன் தடம் மாறி....
உன் புலம்பெயர்
சந்தோஷ வாழ்விற்கு
பிரச்சினை நானேதான் என்று
இன்றுதானே புரிந்து கொண்டேன்..என் அன்பே....
கோபம் வரவில்லை கண்ணே,
கோலம் ஏன் போட்டாய் நீயும்??
விளக்கி சொன்னால் விலத்தி விடுவேன் தானே
ஒன்பது வருட காதலில்
என்னை புரிந்து கொண்டது இவ்வளவுதானா??
அதனால் கூறுகிறேன்
இனியாவது உண்மையாய்
உன் கணவனிடமும்
பிள்ளைகளிடமும்.....
ஏனெனில்
உன்னை எவரும் தப்பாக
பேசிவிடக்கூடாது
ஏனெனில் நான் இன்னமும்
உன்னை நேசிக்கறேன்
மாற்றான் தோட்டத்து
மல்லிகையாய் உள்ளாய்
என்ற போதும் உன்னை மறக்க
ஏன் மனம் தயாராக இல்லையே.....
கஸ்ரோ
Monday, June 28, 2010
உனக்கு சொல்வேன் நன்றி பல....
கல்லூரி நேரங்களில் கூட
கற்பதை பற்றி கண நேரம் கூட
கவலை கொண்டதில்லை
ஏனெனில் என் மனதில்
அப்போதும் உன் நினைவுகளே
நிரம்பி இருந்தன.....
ஆனால்
பாடசாலை பொழுதுகள்
தோல்விகளுடன் கடந்து செல்ல
வாழ்க்கை பயம் வந்தது....
வேலை தேடும் வேலையை விடுத்து...
காதல் செய்யும் நேரங்களே அதிகமாக
வெட்டியாய் கடந்தது சில பொழுதுகள்
இதயத்தில் வாழும்
உன்னையே நினைத்து
பொழுதுகளை நகர்த்தியதால்
உயரங்கள் என்பன
உயர்ந்து போயின.....
ஆனால்,
பணத்தால் உயர்ந்து
பாஸ் போர்ட்டிலும் மாறுபட்டு
கனவானொருவனை கைபிடிக்கும்
எண்ணத்துடன் அழைத்த போதுதான்
காலமெல்லாம் உன்னோடு
வாழும் கனவுகள் கலங்கிய நிலையில்
கண் விழித்து பார்க்கையில்....
காலம் என்னை
கைகழுவி
கடந்து சென்றிருந்தது.
ஆயினும்
பயனின்றி கடந்து சென்ற
காலத்தை கைப்பற்ற
நண்பனின் ஆசியுடனும்
என்னில் உள்ள நம்பிக்கையுடனும்
உறுதியாக ஊர் நாடி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்...
என்ன்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போம் - அப்போது
உனக்கு சொல்வேன் நன்றி பல....
என் பலத்தை
என் மனவுறுதியை
எனக்கு நீ
புரிய வைத்தமைக்காக......
அன்புடன்
கஸ்ரோ
கற்பதை பற்றி கண நேரம் கூட
கவலை கொண்டதில்லை
ஏனெனில் என் மனதில்
அப்போதும் உன் நினைவுகளே
நிரம்பி இருந்தன.....
ஆனால்
பாடசாலை பொழுதுகள்
தோல்விகளுடன் கடந்து செல்ல
வாழ்க்கை பயம் வந்தது....
வேலை தேடும் வேலையை விடுத்து...
காதல் செய்யும் நேரங்களே அதிகமாக
வெட்டியாய் கடந்தது சில பொழுதுகள்
இதயத்தில் வாழும்
உன்னையே நினைத்து
பொழுதுகளை நகர்த்தியதால்
உயரங்கள் என்பன
உயர்ந்து போயின.....
ஆனால்,
பணத்தால் உயர்ந்து
பாஸ் போர்ட்டிலும் மாறுபட்டு
கனவானொருவனை கைபிடிக்கும்
எண்ணத்துடன் அழைத்த போதுதான்
காலமெல்லாம் உன்னோடு
வாழும் கனவுகள் கலங்கிய நிலையில்
கண் விழித்து பார்க்கையில்....
காலம் என்னை
கைகழுவி
கடந்து சென்றிருந்தது.
ஆயினும்
பயனின்றி கடந்து சென்ற
காலத்தை கைப்பற்ற
நண்பனின் ஆசியுடனும்
என்னில் உள்ள நம்பிக்கையுடனும்
உறுதியாக ஊர் நாடி
நகர்ந்து கொண்டிருக்கின்றேன்...
என்ன்றாவது ஒரு நாள்
நாம் சந்திப்போம் - அப்போது
உனக்கு சொல்வேன் நன்றி பல....
என் பலத்தை
என் மனவுறுதியை
எனக்கு நீ
புரிய வைத்தமைக்காக......
அன்புடன்
கஸ்ரோ
Thursday, June 24, 2010
தோற்றேன்.. தோற்றேன்.. தோற்றேன்.....
கல்லூரியில்
பாட கணக்கை
தவறாக போட்டு
கல்வியிடம்
தோற்றேன்
நிதி கணக்கை
தவறாக போட்டு
பணக்கணக்கில்
தோற்றேன்.
அன்பு கணக்கினை
தவறாக போட்டு
உறவுகளிடம்
அவமானத்துடன்
தோற்றேன்
நட்பு கணக்கினை
தவறாக போட்டு
சில நட்புகளிடம்
தோற்றேன்.
காதலிலும்
தவறாக
கணக்கினை போட்டு
இனிய வாழ்க்கையிடமும்
தோற்றேன்.. தோற்றேன்..
தோற்றேன்.....
கஸ்ரோ
பாட கணக்கை
தவறாக போட்டு
கல்வியிடம்
தோற்றேன்
நிதி கணக்கை
தவறாக போட்டு
பணக்கணக்கில்
தோற்றேன்.
அன்பு கணக்கினை
தவறாக போட்டு
உறவுகளிடம்
அவமானத்துடன்
தோற்றேன்
நட்பு கணக்கினை
தவறாக போட்டு
சில நட்புகளிடம்
தோற்றேன்.
காதலிலும்
தவறாக
கணக்கினை போட்டு
இனிய வாழ்க்கையிடமும்
தோற்றேன்.. தோற்றேன்..
தோற்றேன்.....
கஸ்ரோ
Subscribe to:
Posts (Atom)

